search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வருஷாபிஷேக விழா"

    • திருவண்ணாமலை பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலம்.
    • நேற்று வருஷாபிஷேக விழா நடந்தது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் உள்ள உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோவிலில் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ந்தேதி ரோகிணி நட்சத்திர நாளில் கும்பாபிஷேகம் நடந்தது.

    ஆகம விதிகளின்படி தமிழ் மாதத்தில் எந்த நட்சத்திரத்தில் கும்பாபிஷேகம் நடந்ததோ அதே மாதம் அதே நட்சத்திர நாளில் வருஷாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தை மாதம் ரோகிணி நட்சத்திரம் நேற்று வந்தது.

    அதைத்தொடர்ந்து திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 7 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு நேற்று வருஷாபிஷேக விழா நடந்தது.

     விழாவை முன்னிட்டு புனிதநீர் அடங்கிய கலசங்கள் வைத்து நேற்று காலை யாக பூஜை நடந்தது. பின்னர் யாகத்தில் வைக்கப்பட்டு இருந்த புனிதநீரை சிவாச்சாரியார்கள் மேளதாளங்கள் முழங்க கோவில் பிரகாரத்திற்குள் ஊர்வலமாக கொண்டு சென்று அருணாசலேஸ்வரருக்கும், உண்ணாமலை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்தனர். மாலை சுமார் 6 மணிக்கு மேல் விநாயகர் மற்றும் சந்திரசேகரர் வீதியுலா நடைபெற்றது.

    • முதல்கால வேதிகார்ச்சனை, முதல்கால யாக பூஜையும், இரவு தீபாராதனை, பிரசாத வினியோகம் ஆகியவை நடந்தன.
    • அம்பாளுக்கு 108 சங்காபிஷேகம், மகாபிஷேகம் நடந்தன.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி பழையபேட்டை பார்வதி சமேத சோமேஸ்வரர் கோவில் வருஷாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கலச ஸ்தாபனம், ருத்ர பாராயணம் மற்றும் ஹோமம் நடந்தது. தொடர்ந்து தீபாராதனையும், சாமிக்கு மகாதீபாரதனை, பிரசாத வினியோகம் ஆகியவை நடந்தன. மாலை விக்னேஸ்வர பூஜை, மகாசங்கல்பம், 108 கலச ஸ்தாபனம், 108 சங்கஸ்தாபனம், முதல்கால வேதிகார்ச்சனை, முதல்கால யாக பூஜையும், இரவு தீபாராதனை, பிரசாத வினியோகம் ஆகியவை நடந்தன.

    நேற்று காலை இரண்டாம் கால யாகபூஜைகள், தீபாரதனையும், காலை 10.35 மணிக்கு சாமிக்கு 108 குடம் கலசாபிஷேகம், அம்பாளுக்கு 108 சங்காபிஷேகம், மகாபிஷேகம் நடந்தன. மதியம் 12.30 மணிக்கு மகாதீபாராதனை, இரவு சாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • சாமிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடந்தன.
    • அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் பின்புறம் ஜோடுகுண்டுபள்ளம் ஸ்ரீராஜகணபதி நகரில் உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவில் முதலாம் ஆண்டு வருஷாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி காலை 6.30 மணிக்கு வேதபாராயணம், கோ பூஜை, கணபதி பூஜை, மகா சங்கல்பம், நவகிரக ஹோமம், ருத்ர ஹோமம் ஆகியவை நடந்தன. காலை 9 மணிக்கு தீபாராதனையும், கடம் புறப்பாடும், 9.45 மணிக்கு வரசித்தி விநாயகருக்கு கலசாபிஷேகம் ஆகியவை நடந்தன.

    தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடந்தன. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன. மாலை 6 மணிக்கு வரசித்தி விநாயகருக்கு சகஸ்ரநாமம், அதனை தொடர்ந்து தீபாராதனை, பிரசாதம் வினியோகம் ஆகியவை நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பங்கேற்பு
    • திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் விவேகானந்தா கேந்திர வளாகத்தில் உள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி விவே கானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தா கேந்திர வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 5½ ஏக்கர் பரப்பில் ரூ. 22 கோடி செலவில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டு உள்ளது.

    இந்த கோவிலில் கும்பாபி ஷேகம் நடந்து 3 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து 4-வது ஆண்டு வருஷா பிஷேக விழா இன்று நடந்தது. இதையொட்டி கலசா பிஷேக பூஜை, யாக சாலை, அபிஷேக ஆரா தனைகள் போன்றவை நடந்தன.

    திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைமை அர்ச்சகர் வேணு கோபால் தீட்சிதர் தலைமையில் அர்ச்சகர்கள் முரளி கிருஷ்ணா, கிரண் குமார், ரிக்வித், சசி மற்றும் கன்னியாகுமரி ஸ்ரீவெங்க டேஸ்வரா சுவாமி கோவில் அர்ச்சகர்கள் நடத்தி னார்கள்.

    பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. வருஷாபிஷேக நிகழ்ச்சியில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

    • 11-ந்தேதி நடக்கிறது
    • இந்த கோவிலில் கடந்த 2019-ம் ஆண்டு மகாகும்பாபிஷேகம் நடந்தது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தா கேந்திர வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 5½ ஏக்கர் நிலப்பரப்பில் ரூ .22 கோடி செலவில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டு உள்ளது. இந்த கோவிலில் மூலவராக வெங்கடாஜலபதியும் வலதுபுறம் ஸ்ரீதேவி தாயாரும் இடது புறம் ஸ்ரீ பூதேவி தாயாருடன் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார் .மேலும் மூலஸ்தானத்தின் வலதுபுறம் பத்மாவதி தாயார் சன்னதியும் இடதுபுறம் ஆண்டாள் சன்னதியும் அமைந்து உள்ளது.

    மூலவரின் எதிரே கருடாழ்வார் மற்றும் 40 அடி உயர கொடி மரமும் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27 -ந் தேதி மகாகும்பாபிஷேகம் நடந்தது. இந்த கோவில் கும்பாபிஷேகம் நடந்து 3 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து 4-வது ஆண்டு வருஷாபிஷேக விழாவை இந்த ஆண்டு நட்சத்திர திதிபடி சப்தமி திதியான வருகிற 11-ந்தேதி நடத்த திருமலை திருப்பதி தேவஸ் தானத்தின் ஆகம ஆலோசகர் அறிவுரை வழங்கி உள்ளார்.

    அதன்படி கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோவிவில் 4-வது ஆண்டு வருஷாபிஷேக விழாவை வருகிற 11-ந்தேதி நடத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்து உள்ளது. இதைத்தொடர்ந்து வருகிற 11-ந் தேதி காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுப்ரபாத சேவையும் அதைத் தொடர்ந்து 9 மணிக்கு புண்ணியாக வாசனமும் அஸ்தோத்ரா பூஜையும் 10 மணிக்கு சத்தகலசாபிஷேக பூஜையும் நடக்கிறது. அதன் பிறகு சுவாமிக்கு திருமஞ்ச னம் சாத்துதலும் 11 மணிக்கு யாகசாலை பூஜையும் நடக்கிறது. பின்னர் ஹோமம், யாகம், அபிஷேகம் போன்றவைகளும் நடக்கிறது. பகல் 12 மணிக்கு பூர்ணாஹூதி பூஜையும் அலங்கார தீபாராதனையும் நடக்கிறது.

    இந்த பூஜைகளை திருமலை திருப்பதி தேவஸ் தானத்தின் அர்ச்ச கர்கள் தலைமையில் கன்னியாகுமரி ஸ்ரீவெங்க டேஸ்வர பெருமாள் கோவில் அர்ச்சகர்கள் நடத்து கிறார்கள். பின் னர் பக்தர்களுக்கு அருட்பிர சாதம் வழங்கு தல் நடக்கிறது.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சென்னையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் உள்ளூர் தகவல் மற்றும் ஆலோசனை மைய தலைவர் ஏ.ஜே.சேகர் ரெட்டி, துணைத் தலைவர் ஆனந்தகுமார்ரெட்டி, அறங்காவலர் குழு உறுப் பினர் மோகன்ராவ், கன்னியாகுமரி ஸ்ரீ வெங்கடேஸ்வரசுவாமி கோவில் ஆய்வாளர் ஹேமத ரெட்டி ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    • பட்டமரத்து காளியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது
    • அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
    அறந்தாங்கி:


    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சிறுவிளத்தூர் பட்ட மரத்து காளியம்மன் ஆலயத்தில் வருடாபிஷேக விழா நடைபெற்றது. கடந்த ஆண்டு திருப்பணிகள் முடிவுற்று பிப்ரவரி 7-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் வருடாபிஷேக விழா தற்போது நடைபெற்றது.

    ரகு குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள்வேத மந்திரங்கள் முழங்க பட்ட மரத்துகாளியம்மன், காமாட்சியம்மன், முனீஸ்வ ரர், கருப்பர், மதுரைவீரன், முன்னோடியான், சாம்பான் ஆகிய தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யப்ப ட்டது.

    விழாவில் ஒன்றியக்குழு தலைவர்பரணி கார்த்திகேயன் உள்ளிட்ட கிராமத்தார்கள், பொதுமக்கள்கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


    • முள்ளக்காடு ஸ்ரீ நூதன விநாயகர் ஆலயம் வருஷாபிஷேகவிழா நடைபெற்றது.
    • விழாவையொட்டி கோவில் விமானகோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் உள்ள முள்ளக்காடு ஸ்ரீ நூதன விநாயகர் ஆலயம் வருஷாபி ஷேகவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை 8 மணிக்கு விநாயகர் பூஜை, மகாசங்கல்பம், மகாகணபதி ஹோமம், நவகிரகஹோமம், துர்காஹோமம்,லட்சுமி பூஜைகள் நடைபெற்று தீபாராதனையும், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து கோவில் விமானகோபுர கலசங்க ளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு வருஷாபிஷேக விழா நடைபெற்றது. இதனை யடுத்து அலங்காரம் தீபாராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை நிர்வாக குழு தலைவர் வக்கீல் சொக்கலிங்கம், செயலாளர்கள் சேகர் என்ற சந்திரசேகர், சின்னராஜ் என்ற ரகுபதி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். விழாவில் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் வக்கீல் செல்வகுமார், முள்ளக்காடு ஊராட்சி மன்ற தலைவர் கோபிநாத் நிர்மல், ஆறுமுகம் ஜூவல்லர்ஸ் அதிபர் பலவேச கார்த்திகேயன், முள்ளக்காடு வியாபாரிகள் சங்கத் தலைவர் முனியத்தங்கம் நாடார், செயலாளர் முத்துராஜ், உப்பு உற்பத்தியாளர்கள் தங்கராஜ் நாடார், சிவாகர், முகேஷ் சண்முகவேல், ஞானவேலன், தி.மு.க. நிர்வாகிகள் பக்கிள்துரை, சில்வர்சிவா, ஒன்றிய பா.ஜ.க. பொதுச் செயலாளர் பிரபாகர், செந்தில்குமார் ஜெய பாண்டியன்,அழகேசன் அருணாசல பாண்டியன், விஜய் கேபிள்பொன்ராஜ், அஜித் குமார் ரசிகர் மன்ற நிர்வாகிகள் சோலை குமார் உட்பட ஊர் பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • பெரம்பலூர் ஸ்ரீசீரடி மதுரம் சாய்பாபா கோயில் வருஷாபிஷேக விழா பெற்றது.
    • மாலை 3 மணியளவில் பெரம்பலூர் சிவன் கோயிலிருந்து முளைப்பயிர், பால்குடம் மற்றும் பாபா ஊர்வலம் துவங்குகியது.

    பெரம்பலூர்:

    திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே தீரன் நகர் எதிர்புறம் அமைந்துள்ள ஸ்ரீசீரடி மதுரம் சாய்பாபா கோயில் மற்றும் தியான மண்டபம் கட்டப்பட்டு 8 ஆண்டுகள் ஆகிறது. இதன் 8ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது.

    பெரம்பலூர் ஸ்ரீசீரடி மதுரம் சாய்பாபா கோயில் வருஷாபிஷேக விழாவையொட்டி காலை 9.15மணியளவில் மகாகணபதிஹோமத்துடன் பூஜை பூர்வாங்க பணிகள் துவங்கியது.

    இதை தொடர்ந்து 11மணியளவில் மகாதீபாரணை நடந்தது. தொடர்ந்து அலங்காரம் மற்றும் மதிய ஆரத்தியும் நடந்தது. மாலை 3 மணியளவில் பெரம்பலூர் சிவன் கோயிலிருந்து முளைப்பயிர், பால்குடம் மற்றும் பாபா ஊர்வலம் துவங்குகியது.

    ஊர்வலத்தை தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.ஊர்வலம் கடைவீதி, பாலக்கரை, கலெக்டர் அலுவலக சாலை வழியாக கோயிலை அடைந்தது.

    பின்னர் மாலை 6 மணியளவில் சாய்பாபாவிற்கு பால், பன்னீர் அபிஷேகம், புஷ்ப அபிஷேகமும் செய்யப்பட்டு தொடர்ந்து இரவு 7 மணியளவில் மகாதீபாரணை நடந்தது. நாள்முழுவதும் அன்னதானம் நடைபெறும். விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமிதரிசனம் செய்தனர்.

    விழா ஏற்பாடுகளை அறக்கட்டளை நிறுவனர் ரெங்கராஜ், தலைவர் கலியபெருமாள், செயலாளர் அய்யப்பன், பொருளாளர் விஜயா ரெங்கராஜ் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் அனுப்பிரியா செந்திலக், அனுசுயா சரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×